கொலையாளி இருக்க நிரபராதி தூக்கில் இடப்பட்டார் - சீனாவில் சம்பவம்

சீனாவில் 1996ஆம் ஆண்டு ஒரு பெண் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் ஹூக்ஜில்ட் என்ற 18 வயது இளைஞர் குற்றம்சாட்டப்பட்டு தூக்கு தண்டனை பெற்றார்.

கடந்த ஆண்டு அவருக்கு தூக்குத் தண்டனையும் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், பல வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டு தேடப்பட்டு வந்த ஷாவோ ஷிஹாங் (42) என்பவரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்து விசாரணை செய்தனர்.

அதன்போது, 1996ஆம் ஆண்டு நிகழ்ந்த பலாத்காரம் மற்றும் கொலைக் குற்றத்திலும் ஷாவோ ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

இதனால், கடந்த ஆண்டு தூக்கிலிடப்பட்ட ஹூக்ஜில்ட் நிரபராதி என்பது தெரிய வந்துள்ளது.

இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், குற்றவாளி ஷாவோ, நிரபராதியான ஹூக்ஜில்டின் பெற்றோருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டதோடு, ஷாவோவுக்கு மரண தண்டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளனர்.

ஒரு குற்றத்திற்காக இரண்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருப்பதும், நிரபராதி இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழக்க நேர்ந்ததும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற நாடுகளோடு ஒப்பிடுகையில் சீனாவில் மரண தண்டனை அதிக அளவில் நிறைவேற்றப்படுவதாகவும், அது குறித்து உண்மையான புள்ளி விபரங்களை அந்நாட்டு அரசு வெளியிடுவதில்லை என்றும் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.


Related

World 2653243491324676432

Post a Comment

emo-but-icon

item