கட்டார் குடியிருப்பொன்றில் தீ - இலங்கையர்களும் பாதிப்பு
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_648.html
கட்டாரில் செகெலியா என்ற பிரதேசத்தில் குடியிருப்புத் தொகுதி ஒன்றில் ஏற்பட்ட தீ காரணமாக இலங்கையர் பலரும் தங்களது உடைமைகளை இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இக்குடியிருப்புத் தொகுதியானது கட்டார் நாட்டின் சுத்திகருப்பு நிறுவனம் ஒன்றின் ஊழியர்களின் தங்குமிடம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
பாதிக்கப்பட்டவர்கள் தங்களது உணவு உடை போன்ற அடிப்படைத் தேவைகளிலும் கடும் கஷ்டங்களை எதிர் நோக்குவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இது பற்றிக் கருத்து வெளியிட்ட வெளி நாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் பிரதிப் பொது முகாமையாளர் தெரிவிக்கையில், குறித்த சம்பவம் பற்றிய தகவல்கள் தமக்குக் கிடைத்துள்ளதாகவும் மேலதிக தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
