ரிஷாதுக்கு ஒரு நீதி - சிங்களவர்க்கு ஒரு நீதி - பயங்கரவாதி ஞானசார (வீடியோ)
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_501.html
இன்று காலை கைது செய்யப்பட்ட பொது பல சேனா அமைப்பின் செயலாளர் பயங்கரவாதி ஞானசார கைது செய்யப்பட்டு சிறிது நேரத்திலேயே பிணையில் விடுதலை செய்யப்பட்டார். அவருக்குப் பிணை வழங்கப்பட்ட பின்னர் நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்து ஊடகவியலாளர்களிடம் பேசினார். அங்கு அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
சென்றிருந்ததால் உரிய நேரத்தில் நீதிமன்றில் முன்னிலையாக முடியவில்லை. எனினும், நல்லாட்சியிலுள்ள சட்டத்தை நாம் மதிக்கின்றோம்.
எனினும், தற்போது வடக்கில் ஒரு சட்டமும், தெற்கில் ஒரு சட்டமும் இருக்கிறது.
அமைச்சர் ரிஷாட் பதியூதீன் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை அழித்து வருகிறார். அவருக்கெதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
வடக்கில் தடையுத்தரவை மீறி வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் உள்ளிட்டோர் விளக்கேற்றி விடுதலைப் புலிகளை நினைவுகூர்ந்தனர். இதற்கெதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
எனவே தற்போது வடக்கில் ஒரு சட்டமும், தெற்கில் ஒரு சட்டமும் காணப்படுகிறது. எனினும், இந்த அரசாங்கம் அனைத்து இடங்களிலும் ஒரே சட்டத்தை நடைமுறைப்படுத்தும் வரையில் பார்த்துக் கொண்டிருப்போம் என்று குறிப்பிட்டார்.
