சீகிரியா சுவரில் எழுதிய தமிழ் யுவதி நாளை விடுவிக்கப்படுவார்

சீகிரியா சுவரில் எழுதியதாக குற்றம் சுமத்தப்பட்டு சிறைத்தண்டனைக்கு உட்படுத்தப்பட்ட மட்டக்களப்பை சேர்ந்த சின்னத்தம்பி உதயஸ்ரீ என்ற யுவதி நாளை விடுவிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவர் சார்பில் இன்று கண்டி நீதிமன்றத்தில் ஆஜரான சட்டத்தரணி இதனை தெரிவித்துள்ளார்.

2015> பெப்ரவரி 15ம் திகதியன்று உதயஸ்ரீ கைதுசெய்யப்பட்டர்.

இதன்பின்னர் தம்புள்ளை நீதிமன்றத்தினால் அவருக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இதற்கிடையில் பலரின் கோரிக்கைகளுக்கு அமைய ஜனாதிபதியினால் உதயஸ்ரீக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது.

எனினும் தமது சிறைவைப்புக்கு எதிராக அவரால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு காரணமாக விடுதலை தடைப்பட்;டிருந்தது.

இந்தநிலையில் இன்று அவரின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை நல்லாட்சிக்கான மனித உரிமைகள் இயக்கமும், மனித உரிமைகள் இல்லமும் கண்டி மேல்நீதிமன்றத்தில் வைத்து விலக்கிக்கொண்டன.

இந்தநிலையில் அவர் நாளை விடுவிக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Related

Local 1664408448557179076

Post a Comment

emo-but-icon

item