முடிவுக்கு வந்தது பாராளுமன்ற எதிர்ப்பு நடவடிக்கை..
http://weligamanewsblog.blogspot.com/2015/04/blog-post_52.html
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு அழைத்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் முன்னெடுத்த ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டுள்ளது.
மஹிந்த ராஜபாக்ஷவை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு அழைக்காது அவர் இருக்கும் இடத்திற்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினர் சென்று விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தாக சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டதாரர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டமை குறிப்பிடத்தக்கது.
