பாராளுமன்றத்திற்கு முன்பாக பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்தும் அவரை, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு அழைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்முகமாக பாராளுமன்றத்திற்கு பிரவேசிக்கும் வீதியிலே பாரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.

பிக்குமார்கள் உள்ளிட்ட சிலர் பாராளுமன்றத்திற்கு செல்லும் வீதியில் பேரணியாக செல்வதற்கு முயற்சித்தபோது பொலிஸார் அவர்களை வழிமறித்துநிருத்தியுள்ளனர். பொலிஸாரின் வேண்டுகோளுக்கு அமைய இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றத்தடை உத்தரவு பிறப்பித்துள்ளதாக இதன்போது சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள குறித்த பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடாது கலைந்து செல்லுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.  சுற்றுவட்டத்தை அண்டிய வீதிகளில் பாரிய வாகன நெரிசல் கணப்படுகிறது


Related

Local 2209067225673702808

Post a Comment

emo-but-icon

item