தபால் திணைக்களத்திலும் மோசடி - தரக்குறைவான கணனிகள் கொள்வனவு

இலங்கை தபால் திணைக்களத்துக்கு கண் துடைப்புக்காக கேள்விப் பத்திரம் கோரப்பட்டு தரக்குறைவான கணணிகளைக் கொள்வனவு செய்து பாரிய மோசடி இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதி தேர்தல் இடம்பெறுவதற்கு சில வாரங்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ள இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது, தபால் திணைக்களத்துக்கு புதிய கணணிகள் கொள்வனவு செய்யப் போவதாக தெரிவித்து கேள்விப் பத்திரங்கள் கோரப்பட்டுள்ள போதும் அதற்கான நடைமுறைகள் எதுவும் பின்பற்றப்படாது தன்னிச்சையாக முடிவுகளை மேற்கொண்டு தனியார் நிறுவனமொன்றிற்கு வழங்கல் அனுமதியைக் கொடுத்திருந்த குறிப்பிட்ட சில அதிகாரிகள் தபால் திணைக்களத்திலிருந்து விரைவாக கட்டணத்தை செலுத்துவதற்கு பாரிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

எனினும், ஆட்சி மாற்றத்தோடு அது கை கூடாத நிலையில் தொடர்ந்தும் இதற்கு அவர்கள் முயற்சி செய்ததனால் விழித்துக்கொண்ட சிரேஸ்ட அதிகாரியாருவரே இம்முறை கேட்டைக் கண்டுபிடித்து தகவலை வெளியிட்டுள்ளார். கேள்விப் பத்திரத்தில் கோரப்பட்ட கணணி வகைகளை விட தரக்குறைவான 80 கணணிகளைக் கொள்வனவு செய்து இவ்வாறு மோசடி இடம்பெற்றிருப்பதாக தகவல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் தபால் திணைக்களம் இது குறித்த விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Related

Popular 4600132567518043778

Post a Comment

emo-but-icon

item