அக்குரஸ்ஸவில் துப்பாக்கிச் சூடு - ஒருவர் காயம்
http://weligamanewsblog.blogspot.com/2016/02/shooting-incident-in-akuressa.html
இன்று காலை அக்குரஸ்ஸ கொபுதெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற சுப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
முச்சக்கர வண்டி ஒன்றில் வந்த ஒரு குழுவே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டுக்குள்ளானவர் ஹேனெகம பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.
