வத்தளையில் தீ விபத்து
http://weligamanewsblog.blogspot.com/2016/02/blog-post_22.html
வத்தளைப் பிரதேசத்தில் உள்ள நிறப்பூச்சுத் தொழிற்சாலை ஒன்றின் களஞ்சிய சாலையில் இன்று அதிகாலை தீப்பிடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் குறித்த களஞ்சியசாலை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸாரும் தீயணைப்புப் படையினரும் சேர்ந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். தீயினால் ஏற்பட்ட சேதங்கள் இதுவரை கணக்கிடப்படவில்லை.
