பீஜிங்கில் 6.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் -Photos

பீஜிங்கில் இன்று காலை 03:30 மணியளவில் 6.7 ரிக்டர் அளவிலான பாரிய நிலநடுக்கம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேற்படி நிலநடுக்கமானது, பீஜிங் கௌசிங் என்ற இடத்திலேயே இடம்பெற்றுள்ளது.இதனால் பாரிய சேதங்கள் இடம்பெற்றிருப்பதோடு உயிர்சேதங்கள் வெளியிடப்படவில்லை.

ஆனால், தற்போதைய நிலவரத்தின் படி 34 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பட்டுள்ளன.

மேலும் தொடர்மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து முற்றாக விழுந்துள்ளமையால் அதில் வசிக்கம் சுமார் 123 பேரின் நிலை இன்னும் வெளியாகவில்லை.

இதனடிப்படையில் மீட்பு பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், கன ரக இயந்திரங்களின் உதவி கொண்டு மேலும் மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும், தீவின் வானிலை மற்றும் நிலநடுக்க கண்காணிப்பு அமைப்பின் கருத்துப்படி, ரிக்டர் அளவுகோலில் 16.7 கிலோமீட்டர் ஆழத்தில் 6.4 ரிக்டர் அளவீடும், சுமார் 27 கி.மீ. வடகிழக்கு பிங்கித்துங் மாவட்டம் வரை பாதிக்கப்பக்கப்பட்டிருக்கலாம் என சந்தேககிக்கப்படுகின்றது.










Related

World 4161279137393826469

Post a Comment

emo-but-icon

item