ஞானசாரவைப் பார்க்க வருவோருக்குக் கட்டுப்பாடு
http://weligamanewsblog.blogspot.com/2016/02/blog-post_7.html
சிறையில் அடைக்கப்பட்டுள்ள இனவாதியும் பொதுபலசேனா செயலாளருமான ஞானசாரவைப் பார்வையிட வருபவர்கள் மீது கட்டுப்பாடுகளை விதிக்க சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
பொதுவாகக் கைது செய்யப்பட்ட ஒருவரைப் பார்வையிட ஒரு நாளைக்கு மூன்று பேர் மாத்திரமே அனுமதிக்கப்படுவர். எனினும் கடந்த தினங்களில் ஞானசாரவைப் பார்வையிட ஒவ்வொரு நாளும் 3 பேருக்கு மேல் வந்தமை குறிப்பிடத்தக்கது.
இத்தீர்மானம் நேற்று முதல் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஞானசாரவைப் பார்க்க வந்த சுமார் 40 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதில் பொது பல சேன பயங்கார இயக்கத்தின் முக்கியஸ்தரான திலந்த வித்தானகேயும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஓரிரு நாட்களுக்கு முன்னர் ஞானசார தேரர் மஹா நாயக்க தேரர்களுக்கு அனுப்பிய கடிதம் ஊடகங்களில் பிரசுரமானது. இதுவே மேற் குறிப்பிடப்பட்ட தீர்மானம் எடுக்கப்பட மூல காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது.
