ATM மீது மோதி பஸ் விபத்து - 3 பேர் காயம் (படங்கள்)

அதிக வேகத்துடன் வந்த பஸ் வண்டியொன்று முச்சக்கர வண்டி ஒன்றின் மீதும் மோட்டர் சைக்கிள் ஒன்றின் மீதும் மோதியதில் மூவர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளனர். யாழ்ப்பாணம் - பலாலி வீதியில் திரு நெல்வேலி சந்தியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த பஸ் வண்டி வந்த வேகத்தில் முச்சக்கர வணியின்றின் மீதும் மோட்டர் சைக்கிள் ஒன்றின் மீதும் மோதிய பின்னர் அருகில் இருந்த தனியார் வங்கி ஒன்றின் ATM இயந்திரத்தில் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

காயமடைந்தவர்கள் யாழ்ப்பாண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதே வேளை பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.










Related

Local 7610489504048648170

Post a Comment

emo-but-icon

item