வட மாகாண ஆளுனராக ரெஜினோல்ட் குரே நியமனம்
http://weligamanewsblog.blogspot.com/2016/02/blog-post_76.html
வட மாகாண ஆளுனராக ரெஜினோல்ட் குரே நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன முன்னிலையில் தனது பதவியைப் பொறுப்பேற்றார்.
இந்த நியமனம் எதிர்வரும் 16ம் திகதி முதல் அமுலுக்கு வருகின்றது.
ஆரம்பத்தில் ஆசிரியராகப் பணியாற்றிய ரெஜினோல்ட் குரே 1988ம் ஆண்டு மேல் மாகாண சபை உறுப்பினராக தனது அரசியல் பயணத்தைத் தொடர்ந்ததுடன் பின்னர் அவர் பிரதி அமைச்சராகவும் அமைச்சராகவும் பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.
