19 வயதுக்குக் கீழ்ப்பட்ட கிரிக்கட் உலகக்கிண்ணம் மேற்கிந்திய அணிக்கு...
http://weligamanewsblog.blogspot.com/2016/02/19.html
19 வயதுக்குக் கீழ்ப்பட்ட உலகக் கிண்ணக் கிரிக்கட் போட்டியில் மேற்கிந்திய அணி முதன் முதலாக சம்பியனாகியது. இறுதிப் போட்டியில் இந்திய அணியைத் தோற்கடித்து மேற்கிந்தியத் தீவுகள் வெற்றி வாகை சூடியது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய அணி முதலில் இந்தியாவைத் துடுப்பெடுத்தாடப் பணித்தது. அதனடிப்படையில் 45 ஓவர்களில் இந்திய அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 145 ஓட்டங்களுக்குள் சுருண்டது.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய அணி 50வது ஓவரில் 5 விக்கட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
