ஞானசாரவை விடுவிக்க முடியாது - மைத்திரி
http://weligamanewsblog.blogspot.com/2016/02/blog-post.html
சிறையில் அடைக்கப்பட்ட இனவாதி ஞானசாரவை விடுவிக்க முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியாகப் பதிலளித்துள்ளார்.
இன்று சுதந்திர தினமன்று கொழும்பு விகாரமகா தேவி பூங்காவில் பொது பல சேன இனவாதிகள் ஞானசாரவை விடுவிக்குமாறு கோரி ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளது. எனினும் இவர்களது பயணம் ஜனாதிபதி செயலகத்துக்கு வர முன்னர் நீதிமன்ற உத்தரவொன்றின் மூலம் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டது.
பின்னர் பொது பல சேனா பிரதி நிதிகள் புத்த சாசன அமைச்சில் ஜனாதிபதியின் செயலாளரைச் சந்திக சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.
குறித்த சந்திப்பில் கலந்து கொண்ட பொது பல சேனாவின் பிக்கு ஒருவர் தெரிவிக்கையில் ஞானசார தேரரை விடுவிக்க தன்னால் செயற்பட முடியாது என ஜனாதிபதி ஏற்கனவே அறிவித்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
