15 வயது மகன் கோடாரியால் தாக்கியதில் தந்தை மரணம் - அக்குரஸ்ஸவில் சம்பவம்
http://weligamanewsblog.blogspot.com/2016/02/15.html
அக்குரஸ்ஸ மில்லகஹ ஹேன பிரதேசத்தில் மகனின் கோடாரித் தாக்குதலுக்குள்ளான தந்தை ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குறித்த நபர் 48 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கோடாரித்தாக்குதலுக்குள்ளாகி பலத்த காயங்களுடன் காணப்பட்ட தந்தை கம்புறுபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
தாக்குதல் நடத்திய மகன் குடிபோதைக்கு அடிமையானவர் எனவும் அவர் குடித்து விட்டு வந்து தனது மனைவி மற்றும் பிள்ளைகளைத் துன்புறுத்துபவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மரணமான தந்தையின் பிரேத பரிசோதனை இன்று நடைபெறவுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
