ஹோமாகம விவகாரம்:பொலிஸாரால் தேடப்பட்டு வரும் பிக்குமார் நாளை மறுதினம் சரண்?
http://weligamanewsblog.blogspot.com/2016/01/blog-post_20.html
ஹோமாகம நீதிமன்ற வளாகத்தில் நீதிமன்றத்தினை அவமதிக்கும் வகையில் மோசமாக நடத்து கொண்ட பிக்குமாரைக் கைது செய்யுமாறு ஹோமாகம நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்த் நிலையில் குறித்த பிக்குமார் நாளை மறுதினம் பொலிஸில் சரணடையவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மாகல்கந்தே சுகந்த பிக்கு இதனைத் தெரிவித்துள்ளார்.
இனவாதி கலகொட அத்தே ஞானசாரவை விளக்கமறியலில் வைக்குமாறு ஹோமாகம நீதிமன்றம் உத்தரவிட்ட போது பிக்குமார் உட்பட்ட கும்பல் ஒன்று நீதிமன்றத்தை அவமதித்து அங்கு கலகம் விளைவித்தனர்.
மேற்படி சம்பவம் தொடர்பில் மாகல்கந்தே சுகந்த தேரர் உட்பட பலரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துமாறு ஹோமாகம நீதவான் உத்தரவு பிறப்பித்து இருந்தார். குறித்த சம்பவம் தொடர்பில் தாம் கவலையடைவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
