தனது மகளால் நாய்க்கூண்டில் அடைக்கப்பட்ட தந்தை மரணம்
http://weligamanewsblog.blogspot.com/2015/11/woman-imprisons-father-in-dog-cage-died.html
பலகொல்ல, கேங்கல்ல பிரதேசத்தில் தனது மகளால் நாய்க்கூண்டில் அடைக்கப்பட்டிருந்த வேளை பொலிஸாரால் மீட்கப்பட்ட தந்தை மரணமாகியுள்ளார். அம்பிட்டிய பிரதேசத்தில் உள்ள முதியோர் நிலையம் ஒன்றிலேயே இவர் இவ்வாறு மரணமாகியுள்ளார். மரணிக்கும் போது அவருக்கு 73 வயதாகும்.
குறித்த நபரின் மகள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

