பெட்ரோல் மற்றும் டீசல் யுகம் முடிவு? ஐதரசன் கார்கள் தற்போது விற்பனையில்
http://weligamanewsblog.blogspot.com/2015/11/hydrogen-cars-now-available.html
உலகப் போக்குவரத்துத் துறையில் பெரும் புரளியை ஏற்படுத்தும் விதமாக ஐதரசன் வாயுவினால் இயங்கக்கூடிய வகையிலான கார்கள் தற்பொழுது உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இக்கார்கள் பெட்ரோல் மற்றும் டீசல் எரிபொருளைப் பாவிக்காது ஐதரசன் வாயுவினால் மட்டுமே இயக்கப்படுகின்றது என்பது விசேட அம்சமாகும்.
உலகில் மிகவும் சூழல் நேயமிக்க எரிபொருளாகக் கருதப்படும் ஐதரசன் வாயுவில் இயங்கக் கூடிய கார்களை ஜப்பானின் டொயொட்டா, ஹொன்டா மற்றும் தென் கொரியாவுன் ஹையுந்தாய் ஆகிய நிறுவனங்கள் உற்பத்தி செய்துள்ளன.
முதல் கட்டமாக ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சந்தைக்கு இக்கார்கள் விற்பனைக்கு விடப்பட உள்ளன.
இதன் பெறுமதி 66000 ஸ்ட்ரேலிங் பவுன்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை நாணயத்தின் பெறுமதிப்படி இதன் விலை 1,42,40,000 ரூபாவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


