இரண்டு பஸ்கள் விபத்து - 9 பேர் காயம் (படங்கள்)
http://weligamanewsblog.blogspot.com/2015/11/9.html
ஹட்டனில் இருந்து மகரகமைக்கு வந்துகொண்டிருந்த இ.போ.ச பஸ் வண்டியொன்றும் கொழும்பில் இருந்து ஹட்டனுக்குச் சென்று கொண்டிருந்த பஸ் வண்டியொன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 9 பேர் காயமடைந்துள்ளனர்.
காயப்பட்டவர்கள் வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். இன்று நண்பகல் 12 மணியளவிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
அதிக வேகத்துடன் வந்த தனியார் பஸ் வண்டியே இ.போ.ச வண்டியில் வந்து மோதியுள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.



