பிச்சையாக கிடைத்த அமைச்சுப் பதவி! எஸ்.பி. யை விளாசித் தள்ளிய பிரசன்ன ரணதுங்க
http://weligamanewsblog.blogspot.com/2015/10/blog-post.html
அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்கவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சுப் பதவிகள் பிச்சையாகக் கிடைத்துள்ளதாக பிரசன்ன ரணதுங்க விளாசித் தள்ளியுள்ளார்.
சுதந்திரக் கட்சியை பாதுகாப்பது தொடர்பான கருத்துப் பரிமாறலின் போது ஜனாதிபதி மைத்திரிபால முன்னிலையில் சில நாட்களுக்கு முன்னர் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
இதன்போது கருத்து வெளியிட்ட அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க போன்றோர் கட்சியை பிளவுபடுத்த முயல்வதாகவும், விமல், உதய கம்மன்பில, வாசுதேவ போன்றோருடன் இணைந்து தனி அணியாக இயங்க முற்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
கடுமையான ஆவேசத்துடன் இதற்குப் பதிலளித்த பிரசன்ன ரணதுங்க, அமைச்சரே உங்களுக்கு பொதுமக்கள் வாக்கு அளிக்கவேயில்லை. உங்கள் அமைச்சுப் பதவி மட்டுமல்ல, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் கூட பிச்சையாக கிடைத்ததுதான் என்று கடுமையாக விளாசியுள்ளார்.
இதனையடுத்து எஸ்.பி. திசாநாயக்கவும் சூடாகப் பதிலளிக்க, இருவருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் மூண்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தலையிட்டு இரண்டு பேரையும் சமாதானப்படுத்தியுள்ளார்.
