இனாமலுவவில் பஸ் விபத்தொன்றில் 35 பேர் காயம் (படங்கள்)
http://weligamanewsblog.blogspot.com/2015/10/35.html
தம்புள்ள இனாமலுவ பிரதேசத்தில் அதிகாலை 2.45 மணியளவில் தனியார் பஸ் ஒன்றும் லொறி ஒன்றும் விபத்துக்குள்ளாகியுள்ளன.
இதன் காரணமாக பஸ் வண்டியில் சென்ற 35 பேர் காயங்களுக்குள்ளானதுடன் அதில் 25 பேர் தம்புள்ள ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனையோருக்கு சிறு காயங்களே ஏற்பட்டன. இதனால் அவர்கள் வேறு பஸ் வண்டிகளில் ஏறித் தங்களது பயணத்தைத் தொடர்ந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
பொலனறுவையிலிருந்து வந்த குறித்த பஸ் கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த சீமெந்து ஏற்றிச் செல்லும் லொறி ஒன்றின் பின் பக்கத்தில் மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் கூறினர்.
சீகிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்துகின்றனர்.




