சேயா படுகொலை : உறவினர்கள் இருவர் கைது
http://weligamanewsblog.blogspot.com/2015/09/blog-post.html
கொட்டதெனியாவ - படல்கம, அக்கரங்கஹ பகுதியைச் சேர்ந்த சேயா செதவ்மி என்ற முன்பள்ளிச் சிறுமி கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் உறவினர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
17 வயதுடைய இளைஞனும் மற்றுமொரு நபருமே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டி.என்.ஏ பரிசோதனையின் முடிவிலேயே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்கள் இருவரும் சிறுமியின் உறவினர்கள் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
ஐந்து வயதுடைய சேயா செதவ்மி, கடந்த 13 ஆம் திகதி காணாமல் போன நிலையில் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு சடலமாக மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

