தேர்தல் காரணமாக க.பொ.த. உயர்தரப் பரீட்சை இரண்டு கட்டங்களாக பிரிப்பு
http://weligamanewsblog.blogspot.com/2015/06/blog-post_36.html
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17ம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் காரணமாக க.பொ.த. உயர்தரப் பரீட்சையை இரண்டு கட்டங்களாக பிரிப்பதற்கு பரீட்சைத்திணைக்களம் முடிவு செய்துள்ளது.
இதன்னடிப்படையில்
முதற்கட்டமாக ஆகஸ்ட் மாதம் 4ம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 13ம் திகதி வரையும்
இரண்டாம் கட்டமாக ஆகஸ்ட் மாதம் 24ம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 8ம் திகதி வரையுமாக இரண்டு கட்டங்களாக நடைபெறும் என பரீட்சைத்திணைக்களம் அறிவித்துள்ளது.
