WiFi மூலம் இனிமேல் போன்களையும் சார்ஜ் செய்திடலாம்

வயர்கள் ஏதும் இல்லாமல் WiFi, இணையத்தளம் வழியாக மொபைல்போனை சார்ஜ் செய்யும் புதிய தொழில்நுட்பத்தை வாஷிங்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். 

 30 அடி தூரம் வரையில் காற்றலை வழியாக வயர்கள் ஏதுமின்றி WiFi இண்டர்நெட் மூலம் போன்களை சார்ஜ் செய்யும் ‘power over WiFi’ என்ற நவீன தொழில்நுட்பத்தை ஆராய்ந்து வருகின்றனர். 

 இந்த தொழில்நுட்பமானது வழக்கமாக WiFi ரௌட்டர்களில் இருந்து அனுப்பப்படும் ரேடியோ பிரிக்வன்ஸி பவரை பயன்பாட்டுக்கான நேரடி மின்சாரமாக (usable direct current (DC) power) மாற்றுவதன் மூலம் மொபைல்போனிற்கு சார்ஜ் ஏற்றப்படுகின்றது. ஆனால், தற்போதுள்ள WiFi தொழில்நுட்பத்தை விட இதற்கு சற்று மேம்படுத்தப்பட்ட வன்பொருள் தேவை. ஒரு ரௌட்டலிருந்து எவ்வளவு மின்சாரத்தை வெளியில் எடுக்க முடியும் என்பதை கண்டறிய புதிய மென்பொருள் ஒன்றும் உருவாக்கப்பட்டு ஆராய்ச்சி நடந்து வருகிறது. 

 இந்த தொழில்நுட்பத்தை ஏற்கனவே கெமராவில் 17 அடி தூர தொலைவில் இருந்து சோதனை செய்து பார்த்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். அதிகபட்சமாக 28 அடி தூரத்தில் வெப்பநிலை சென்சார்கள், பேட்டரியை சார்ஜ் செய்வது உறுதியாகியுள்ளது. அதேநேரத்தில், சார்ஜ் ஏறும் போது WiFi இண்டர்நெட் வேகத்திலும் எவ்வித தடங்கலும் ஏற்படவில்லை. இதையடுத்து, ஆராய்ச்சியாளர்கள் வெகுவிரைவில் இந்த தொழில்நுட்பத்தை அன்றாட பயன்பாட்டுக்கு கொண்டு வர முயற்சி செய்து வருகின்றனர்.


Related

Technology 1619196582361586074

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the Week

cartoon

Popular Posts

item