Learning to lead பாடசாலைகளிட்கான விஷேட வழிகாட்டல் செயல்திட்டம்

Learning to lead பாடசாலைகளிட்கான விஷேட வழிகாட்டல் செயல்திட்டத்தில் விஷேட செயலமர்வுகள் மற்றும் பயிற்சி நெறிகள் வெலிகம அரபா தேசிய பாடசாலையிலும் முன்னேடுக்கப்பட்டுள்ளதுடன் இதன் முதற்கட்டமாக ஆசிரியர்களுக்கான வழிகாட்டல் ,பிள்ளைகளிற்கான வழிகாட்டல் மற்றும் பெற்றோர்களுட்கான வழிகாட்டலுடன் சம காலத்தில் பிள்ளைகள் கல்வி , ஒழுக்கழுமியங்களில் எதிர் நோக்கும் சவால்களும் அவற்றிற்கான தீர்வுகள் பற்றியும் ஆராயப்பட்டன. 

கல்வி , சிறுவர் உளவியலாளர் மற்றும் பயிற்றுவிப்பாளர் A.R யஸ்மின் முபாரக் கலந்துகொண்டு வழிகாட்டலை வழங்கியதுடன் இந்நிகழ்வில் 1000 இற்கும் மேற்பட்ட பிள்ளைகள் கலந்துகொண்டு பயனடைந்தமை விஷேட அம்சமாகும்.



Related

Weligama 1091410046392574294

Post a Comment

emo-but-icon

item