ராஜகிரிய வீட்டு அறையில் மனித எலும்புக்கூடு

ராஜகிரிய - வெலிகடசில்வா மாவத்தை பகுதி வீடொன்றின் அறையில் இருந்து மனித எலும்புக்கூடு மீட்கப்பட்டுள்ளது. 

 லுனுவிலவத்த அக்குரன பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் ராஜகிரிய - வெலிகடசில்வா மாவத்தையில் வசித்துவந்த தனது கணவரை கடந்த நான்கு மாதங்கள் காணவில்லை என வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு செய்துள்ளார். 

 அதன்படி, அவர் வசித்து வந்ததாகக் கூறப்படும் வீட்டில் சென்று பொலிஸார் சோதனை செய்தபோது அறைக்குள் எலும்புக் கூடு மீட்கப்பட்டுள்ளது. 

புளத்சிங்கள குரே என்ற தனது கணவரே உயிரிழந்துள்ளதாக மனைவி அடையாளம் காட்டியுள்ளார். குறித்த வீட்டுக்கு அயலில் வசித்தவர்களும் நபரை நான்கு மாதங்கள் காணவில்லை என கூறியுள்ளனர். இந்நிலையில் இது இயற்கை மரணமா அல்லது கொலையா என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
-ad


Related

Local 7867538084531567241

Post a Comment

emo-but-icon

item