Jelly fish வகை மீன் காரணமாக மாத்தறை பொல்ஹேன கடலில் நீராடத் தடை;9 பேர் வைத்தியசாலையில்
http://weligamanewsblog.blogspot.com/2015/06/jelly-fish-9.html
Jelly fish என்ற விஷ மீன்களின் ஆக்கிரமிப்பு காரணமாக மாத்தறையிலுள்ள பொல்ஹேன கடலில் நீராடிய இருவர் இன்று(21) வைத்தியசாைலயில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த தினங்களில் விஷ மீன்கள் காரணமாக 9 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தமை மேலும் தெரியவந்துள்ளது.
கடந்த ஐந்து தினங்களில் Jelly fish என்ற விஷ மீன்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதாகவும் இதனால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக குறித்த பகுதிக் கடற்பரப்பில் நீராடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
கடந்த சில தினங்களாக காணப்படும் காலநிலை மாற்றங்கள் காரணமாக இவை தெற்கு கடற் பிரதேசத்திற்கு வந்திருக்கக் கூடும் என தெரிவிக்கப்படுகிறது.
