அரசியல் காய் நகர்த்தல் : மைத்திரியின் ஆலோசகராக தி.மு. நியமனம்
http://weligamanewsblog.blogspot.com/2015/06/blog-post_98.html
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சிரேஷ்ட ஆலோசகராக, முன்னாள் பிரதமர் தி.மு.ஜெயரத்ன நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான நியமனக் கடிதம் அவரிடம் கையளிக்கப்பட்டிருப்பதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புதிய பிரதியமைச்சர்கள் நால்வர் நேற்று பதவிப்பிரமாணம் செய்த நிகழ்வுக்குப் பிறகு தி.மு.வுக்கான நியமனக் கடிதம் ஜனாதிபதியால் வழங்கப்பட்டிருக்கிறது.
சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் என்கிற அடிப்படையில் தி.முவுக்கு இப்பதவியை ஜனாதிபதி வழங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மஹிந்த அணியை வலுவிழக்கச் செய்யும் அரசியல் காய் நகர்த்தல் செயற்பாடு இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.
-dc
