சிறுவர் பாலியல் துஷ்பிரயோக சம்பவம் தொடர்பாக இரகசியமாக அறிவிக்கவும்
http://weligamanewsblog.blogspot.com/2015/06/blog-post_43.html
சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படும் சம்வத்துடன் தொடர்புடையவர்களை இரகசியமான முறையில் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு பொலிஸார் மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.
சிறுவர் துஷ்பிரயோக சம்வங்கள் தொடர்பில் நீண்டகாலத்தின் பின்னர் கிடைக்கும் முறைப்பாடுகளை விசாரணைக்குட்படுத்தப்படும் போது பல பிரச்சினைகளை எதிர்நோக்குவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவண் குணசேகர தெரிவித்தார்.
