மஹிந்தவுக்கு இடமில்லை : ராஜித திட்டவட்டம்
http://weligamanewsblog.blogspot.com/2015/06/blog-post_91.html
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பில் வேட்பு மனு வழங்கப்பட மாட்டாது என அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.
மட்டுமன்றி,
தேசியப்பட்டியலிலும் அவரது பெயர் இடம்பெறப்போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன தெரிவித்ததாகவும் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளர்கள் என்று எவரும் இல்லையென்று ஜனாதிபதி தெரிவித்ததாகவும் இன்று வியாழக்கிழமை(18) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் செய்தியாளர் மாநாட்டில் அவர் தெரிவித்தார்.
