ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் விமானம் விபத்து : கட்டுநாயக்கவில் சம்பவம்
http://weligamanewsblog.blogspot.com/2015/06/blog-post_79.html
ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ்க்கு சொந்தமான விமானம் ஒன்று இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கும் போது விபத்துக்குள்ளானதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிகின்றன.
பாரிஸிலிருந்து இலங்கை வந்த ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் UL 564 என்ற விமானமே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளது.
இன்று அதிகாலை 5.21 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றதாகவும், விபத்தில் காயமடைந்த 5 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ நேரத்தில் குறித்த விமானத்தில் 193 பயணிகளும் 16 விமான ஊழியர்களும் பயணித்தமை குறிப்பிடத்தக்கது.
