‘வெள்ளை வேன்’ கடத்தல்கள் : பொலிஸ் விசாரணை ஆரம்பம்
http://weligamanewsblog.blogspot.com/2015/06/blog-post_90.html
கடந்த ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த ‘வெள்ளை வேன்’ கடத்தல்கள் மற்றும் கொலைகள் தொடர்பில் பொலிஸ் மா அதிபர் தலைமையில் விஷேட குற்றத் தடுப்பு பொலிஸ் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
கொலன்னாவை நகரசபைத் தலைவர் ரவீந்திர உதயசாந்த மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைவாகவே இவ்விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தனது சகோதரர் வெள்ளை வேனில் கடத்தப்பட்டதாகவும், வெள்ளை வேனில் வந்தவர்கள் சிலர் தன்னையும் கடத்த முற்பட்டதாகவும் ரவீந்திர தனது முறைப்பாட்டில் தெரிவித்திருக்கிறார்.
இராணுவத்தினர் இக்கடத்தல்களில் சம்பந்தப்பட்டிருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
