மோட்டார் சைக்கிள்களுக்கு இன்று முதல் கடுமையான சட்டங்கள் அமுல்
http://weligamanewsblog.blogspot.com/2015/06/blog-post_19.html
மோட்டார் சைக்கிள்களுக்கான சட்டங்களுள் சில இன்று முதல் கடுமையாக அமுல்படுத்தப்பட்டுள்ளன. தினம் தினம் அதிகரித்துவரும்விபத்துக்களைக் கட்டுப்படுத்தவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு முதல் 4 மாதங்களில் மோட்டார் சைக்கிள் விபத்துக்கள் காரணமாக 254 பேர் பலியானதாகவும் அது இந்த வருடம் 350ஐத் தாண்டியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சட்டங்களை மீறுபவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
