சரத் பொன்சேகாவின் மனு நிராகரிப்பு

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை மீளப் பெற்றுத் தருமாறு கோரி தாக்கல் செய்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது. 

 இராணுவ நீதிமன்றில் தனக்கு வழங்கப்பட்ட தண்டனையால் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோனதாகவும் ஆனால் தற்போது தான் அனைத்துக் குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளதால் அப்பதவியை மீண்டும் தனக்கு வழங்குமாறு பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு உத்தரவு பிறப்பிக்கும்படி கோரி சரத் பொன்சேகா மனு தாக்கல் செய்திருந்தார். 
 இந்த மனு இன்று (18) விசாரணைக்கு வந்தபோது மேன்முறையீட்டு நீதிமன்றம் மனுவை நிராகரித்துள்ளது.


Post a Comment

emo-but-icon

item