பெண்கள் உலக கோப்பை கால்பந்து: கால்இறுதியில் ஜெர்மனி,சீனா
http://weligamanewsblog.blogspot.com/2015/06/blog-post_86.html
பெண்களுக்கான 7-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கனடாவில் நடந்து வருகிறது. 24 அணிகள் கலந்து கொண்ட இந்த போட்டியில் லீக் முடிவில் 16 அணிகள் 2-வது சுற்றுக்கு முன்னேறின. 2-வது சுற்றில் நேற்று இரண்டு ஆட்டங்கள் நடந்தன.
ஒரு ஆட்டத்தில் உலகின் நம்பர் ஒன் அணியான ஜெர்மனி 4-1 என்ற கோல் கணக்கில் சுவீடனை சுலபமாக விரட்டியடித்து கால் இறுதிக்குள் நுழைந்தது.
மற்றொரு ஆட்டத்தில் சீனா 1-0 என்ற கோல் கணக்கில் கேமரூனை தோற்கடித்து கால் இறுதியை எட்டியது.
