கண் பார்வைத் திறனை அறிய புதிய மொபைல் அப்ளிகேஷன்
http://weligamanewsblog.blogspot.com/2015/06/blog-post_732.html
கண்களின் பார்வை திறன் குறித்து அறிவதற்காவே தற்போது ஒரு மொபைல் அப்ளிகேஷன் அறிமுகமாகியுள்ளது.
லண்டனில் கண்பார்வையை பரிசோதனை செய்ய ஒரு லட்சம் பவுண்ட் வரை ஆகும் என்று கூறியுள்ள விஞ்ஞானிகள் இதற்காகவே ஒரு புதிய அப்ளிகேஷன் கண்டுப் பிடிக்கப்பட்டுள்ளதாக கூயறியுள்ளனர்.
Kitt peak என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய மொபைல் அப்ளிகேஷனால் கண் பார்வையை துல்லியமாக பரிசோதனை செய்ய முடியும் என்கின்றனர்.
இந்த ஸ்மார்ட் போனில் விழித்திரையை ஸ்கேன் செய்து, போனின் ப்ளாஷ் லைட்டை கொண்டு கண்ணில் ஏற்படும் நோய்களையும் கண்டறிய முடியும் என்கின்றனர் மருத்துவ விஞ்ஞானிகள்.
இதற்கான செலவு வெறும் 300 பவுண்ட மட்டுமே ஆகும் என்பதால் இது அனைத்து தரப்பு மக்களிடமும் நல்ல வரவேற்பை பெறும் என கூறப்படுகிறது.
இந்த மொபைல் அப்ளிகேஷன் மூலம் கென்யாவில் 233 பேரிடம் கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், அந்த பரிசோதனைகள் அனைத்துமே சரியான முடிவுகளை கொடுத்துள்ளதாகவும் லண்டனைச் சேர்ந்த மருத்துவ விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
