ஆப்கானிஸ்தான் பாராளுமன்றம் மீது தாக்குதல்
http://weligamanewsblog.blogspot.com/2015/06/blog-post_363.html
ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் அமைந்துள்ள பாராளுமன்ற கட்டிடத்தொகுதி மீது சற்று முன்னர் குண்டுத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் பாராளுமன்ற அமர்வுகள் இன்று இடம்பெற்றுகொண்டிருந்த வேளையில், பாதுகாப்பை மீறி உள்ளே நுழைந்த கும்பலொன்று, பாராளுமன்ற உறுப்பினர்களை அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றிய பின்னர் பாராளுமன்றம் மீது துப்பாக்கிச் சூடும், குண்டுத் தாக்குதலும் நடத்தியுள்ளனர்.
தாக்குதல்களின் பின்னர் பாராளுமன்றம் புகை மண்டலமாகக் காணப்படுவதாக அந்நாட்டுச் செய்திகள் தெரிவிகின்றன. மேலதிக சேத விபரங்கள் தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.
