முதலை மீது பயணம் செய்த ரக்கூன் : சமூக வலைத்தளங்களில் மிகுந்த வரவேற்பு
http://weligamanewsblog.blogspot.com/2015/06/blog-post_85.html
அமெரிக்காவின் புளோரிடா பகுதியில் முதலை ஒன்றின் மீது ரக்கூன் ஒன்று ஏறி பயணம் செய்வதுபோன்று சுற்றுலா பயணி ஒருவரால் எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரசித்தமாகியுள்ளது.
அமெரிக்காவின் மத்திய புளோரிடாவில் உள்ள காடொன்றுக்குச் குடும்பத்துடன் ரிச்சர்ட் ஜோன்ஸ் என்பவர் சுற்றுலா சென்றுள்ளார்.
இதன்போது தண்ணீரில் சென்ற முதலை ஒன்றின் மீது ரக்கூன் ஏறிச்சென்றதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
அரிதான அக்காட்சியை புகைப்படம் எடுத்த ஜோன்ஸ் சமூக வலைதளங்களில் பதிவுசெய்து உள்ளார்.
இதனையடுத்து சமூக வலைத்தளங்கில் குறித்த புகைப்படத்திற்கு மிகுந்த வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளதோடு குறித்தப் படம் பார்ப்பவரை பகிர வைக்குமளவுக்கு ஈர்ப்பை பெற்றுள்ளது.
மேலும் செய்தி இணையத்தளங்கள் பலவும் புகைப்படத்தை பாராட்டி செய்தி வெளியிட்டு உள்ளன.
இது தொடர்பாக செய்தி சேவை ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள ரிச்சர்ட் ஜோன்ஸ்,
“முதலை ஆற்றில் நீருக்குள் சென்றதும், அதன்மீது தந்திரமாக ரக்கூன் அமர்ந்து விட்டது. தொடர்ந்து எங்கும் சாயாமல், முதலையின் மீது நின்ற வண்ணம் ஆற்றில் பயணம் செய்தது.”
என்று கூறியுள்ளார்.
