மக்கள் பிரச்சினைகளை காலம் தாழ்த்தாது தீர்த்து வைக்க வேண்டும்
http://weligamanewsblog.blogspot.com/2015/06/blog-post_77.html
மக்களுக்கான சேவையில் எவரும் பிரிந்து நின்று செயற்பட முடியாது. மக்கள் பிரச்சினைகளை காலம் தாழ்த்தாது தீர்த்து வைக்க வேண்டியது அரசியல் வாதிகள், அரச அதிகாரிகளின் பொறுப்பு என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
பொலன்னறுவை மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற அபிவிருத்திக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று குறைகளை ஆராய்ந்து உரிய அறிவுறுத்தல்களை வழங்கி மக்களின் பிரச்சினைகளுக்கு துரித தீர்வுகளை வழங்கவுள்ளோம்.
இக்கலந்துரையாடலில் எடுக்கப்படுகின்ற முடிவுகள் அவ்வாறே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். மாவட்டத்தின் சிறு மற்றும் நடுத்தர அளவிலான நீர்ப்பாசன புனரமைப்புப் பணிகளுடன் அணைகளைப் பாதுகாக்கும் கருத்திட்டம் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்படும்.
ஆசிரியர் பற்றாக்குறை நிலவிய பாடசா லைகளையும் அடையாளம் காணப் பட்ட சில பாடசாலைகளில் கட்டட அபிவிருத்திகளும் விரைவில் பூர்த்தி செய்யப்படவுள்ளன.
சுகாதார பிரச்சினைகள் சிறுநீரக நோய், சிறுநீரக நோயை தடுப்பது தொடர்பாக மக்களுக்கு அறிவூட்டுவதற்கு பாடசாலை மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படுகின்ற அறிவூட்டும் நிகழ்ச்சித் திட்டங்களை தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டியதன் முக்கியத்துவம்.
மக்களுக்கு மிகச் சிறந்த சுகாதார சேவை வழங்குவது அரசின் பொறுப்பாகும்.
காணி உறுதிகளின் சிக்கல்களை தீர்க்கின்ற போது மாவட்ட செயலகங்களில் மக்கள் பல நாட்களை கழிக்க வேண்டியுள்ளது. அவ்வாறு நடப்பதற்கு இடமளிக்க முடியாது. அதன் போது மக்களுக்கு துரித சேவை ஒன்றை வழங்குவதற்கான செயல்முறை ஒன்றை தயாரிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ள மாவட்டத்தில் 1500 கிராமங்களை மேம்படுத்தும் நிகழ்ச்சித் திட்டத்தின் முன்னேற்றம் அனர்த்த முகாமைத்துவத்தின் போது தலைதூக்கியுள்ள சிக்கல்கள் அது தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள புதிய முன்மொழிவுகள் பல இதன்போது ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டன.
கடந்த வெள்ளப்பெருக்கில் சேதமடைந்த வீடுகளை மீண்டும் அமைப்பதற்கு ஆரம்பிக்கப்பட்ட நிகழ்ச்சித் திட்டத்தின் முன்னேற்றம் பற்றி கேட்டறிந்த ஜனாதிபதி அவர்கள் அழிந்துபோன வயல்களை அபிவிருத்தி செய்வதற்காக நடைமுறைப் படுத்தப்படுகின்ற வேலைத்திட்டத்தைப் பற்றியும் ஜனாதிபதி ஆராய்ந்தார்.
-et
