20வது திருத்தம் : நாளை இறுதி முடிவு ; எம்.பி.க்கள் தொகை 225 4:42 pm June 11, 2015 0 16 Views
http://weligamanewsblog.blogspot.com/2015/06/20-225-442-pm-june-11-2015-0-16-views.html
20வது அரசியல் யாப்பு திருத்தம் குறித்து நாளை இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும், பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 225ஆக இருக்க வேண்டும் என்பதை பல தரப்பினரும் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அரசாங்க தரப்பிற்குள் பல கருத்துக்கள் காணப்படுவதாகவும் கடந்த ஆட்சியிலும் இதே நிலை இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கம் இன்றோ இல்லை நாளையோ கலைக்கப்பட மாட்டதெனவும் அதற்குள் மேலும் பிரதி அமைச்சர்கள் நியமிக்கப்பட மாட்டார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
