சோமவங்சவின் புதிய கட்சி அங்குரார்ப்பணம் இன்று
http://weligamanewsblog.blogspot.com/2015/06/blog-post_758.html
மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் சோமவங்ச அமரசிங்கவின் தலைமையிலான புதிய அரசியல் கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று இடம்பெறுகின்றது.
கொழும்பு புதிய நகர மண்டபத்தில் இதற்கான நிகழ்வு இடம்பெறுகின்றது. இரண்டு அமர்வுகளாக இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது என புதிய கட்சியின் தலைவர் சோமவங்ச அறிவித்துள்ளார்.
இதன் முதல் நிகழ்வு பொது மக்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் எனவும் இரண்டாம் நிகழ்வு கட்சி உறுப்பினர்களுக்கு எனவும் அமையவுள்ளது.
கட்சியின் பெயர் கட்சி உறுப்பினர்களின் உடன்பாட்டின் பின்னர் வெளியிடப்படும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
