நாட்டில் சிங்கள மக்களுக்கு எதிரான அரசியல்- பொதுபல சேனா

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தில் சிங்கள சமூகம் பல பிரிவுகளாக பிரிந்துள்ளதாக பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். 

கடந்த அரசாங்கத்திலும் இந்நிலைமை காணப்பட்டதுதான். இருப்பினும் தற்பொழுது இது அதிகரித்துள்ளது. பிரதான இனமான சிங்கள இனம் தொடர்ந்தும் நெருக்கடிக்குள்ளாக்கும் அரசியலொன்று நாட்டுக்குள் உள்ளதாகவும் இந்த நிலைமையை விரைவில் மாற்றியமைக்க வேண்டும் எனவும் தேரர் சுட்டிக்காட்டியுள்ளார். 

இதற்குத் தீர்வாக தமது அமைப்பு பொது ஜன பெரமுன எனும் பெயரில் அரசியலில் பிரவேசித்து, சிங்கள இனத்தை ஐக்கியப்படுத்தும் நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாகவும் தேரர் குறிப்பிட்டார். 

20 ஆவது திருத்தச் சட்டமூலம் சிறு கட்சிகளுக்கு பாதிப்பாக இருந்தாலும், நாட்டுக்கு நலனுள்ள ஒன்றாகும் எனவும் தேரர் சிங்கள ஊடகமொன்றுக்குக் கருத்துத் தெரிவித்துள்ளார்.


Related

Local 8792873299805711208

Post a Comment

emo-but-icon

item