ஐ.ம.சு.முன்னணியைப் பலப்படுத்த விசேட குழு
http://weligamanewsblog.blogspot.com/2015/06/blog-post_273.html
நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறும் பொருட்டு, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் தொடர்புடைய கட்சிகளின் ஆதவைத் திரட்டும் நோக்கில் எட்டுப் பேர் கொண்ட குழுவொன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் ஆகியோருடன் நேற்று ஜனாதிபதி மேற்கொண்ட விசேட கலந்துரையாடலின் போது இக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இக்குழுவில் அமைச்சர்களான
ராஜித சேனாரத்ன,
சரத் அமுனுகம,
ரெஜினோல்ட் குரே,
மஹிந்த சமரசிங்க,
லக்ஷ்மன் யாபா அபேவர்தன,
மஹிந்த அமரவீர மற்றும்
திலங்க சுமதிபால
ஆகியோர் உறுப்பினர்களாவர்.
இக்குழு நாளை மறுதினம் முதல் தடவையாக கூடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
-DC
-DC
