வாகன விபத்தில் பெண் மற்றும் குழந்தை பலி
http://weligamanewsblog.blogspot.com/2015/06/blog-post_7.html
அநுராதபுரம்-குருநாகலை வீதியில் ஆலன்குழம் பிரதேசத்தில் இன்று காலை இடம் பெற்ற வாகன விபத்தில் பெண் மற்றும் குழந்தை ஆகிய இருவர் உயிரிழந்துள்ளனர்.
சிறிய டக்டர் மற்றும் ஒரு பவுஸர் மோதியதிலே குறித்த விபத்து நிகழ்ந்துள்ளது.
குறித்த சிறிய டக்டரில் 12 பேர் பயணித்ததாகவும் அவர்களில் 10 பேர் காயமடைந்து அநுராதபுர போதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
