இலங்கை டெஸ்ட் தொடரிலிருந்து பாக்.அணி வீரர் அஜ்மல் நீக்கம்
http://weligamanewsblog.blogspot.com/2015/06/blog-post_58.html
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 5 ஒருநாள், இரண்டு 20 ஓவர் போட்டி தொடரில் விளையாடுகிறது.
முதலாவது டெஸ்ட் போட்டி காலியில் எதிர்வரும் 17ஆம் திகதி தொடங்குகிறது. டெஸ்ட் போட்டி தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
பந்துவீச்சு சர்ச்சையில் சிக்கி மீண்ட சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். தொடக்க ஆட்டக்காரர் அகமது ஷேசாத், ஷான் மசூத் ஆகியோர் அணிக்கு திரும்பி இருக்கிறார்கள். வேகப்பந்து வீச்சாளர்கள் ரஹாத் அலி, சொகைல் கான், துடுப்பாட்ட வீரர் சொகைப் மசூத் ஆகியோரின் காயம் குணமடையாததால் அணி தேர்வில் அவர் களின் பெயர்கள் கருத்தில் கொள்ளப்படவில்லை.
பாகிஸ்தான் அணி வருமாறு:-
மிஸ்பா உல்-ஹக்,
முகமது ஹபீஸ்,
அகமது ஷேசாத்,
ஷான் மசூத்,
அசார் அலி,
யூனிஸ்கான்,
ஆசாத் ஷபிக்,
ஹாரிஸ் சொகைல்,
சர்ப்ராஸ் அகமது,
யாசிர் ஷா,
சுல்பிகர் பாபர்,
வஹாப் ரியாஸ்,
ஜூனைத்கான்,
இம்ரான்கான்,
இஷான் அடில்.
