முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்சவிற்கு இன்று பிணை
http://weligamanewsblog.blogspot.com/2015/06/blog-post_54.html
சுமார் 2 மாதஅளவில் விளக்கமறியலில் இருந்த முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்சவிற்கு கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று(15) பிணை வழங்கியுள்ளது.
இவருக்கு ஒரு இலட்சம் ரூபா ரொக்கப்பிணையும் 10 இலட்சம் ரூபா சரீரப்பிணையும் அறவிடப்பட்டுள்ளது.
எனினும் பஸில் ராஜபக்சவின் கடவுச்சீட்டை கடுவல நீதிமன்றத்தின் பொறுப்பில் வைக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
இவர் திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் பாரிய நிதி மோசடி காரணமாக கைதுசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
