பொதுபலசேனாவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
http://weligamanewsblog.blogspot.com/2015/06/blog-post_49.html
கொழும்பு, நிப்போன் ஹோட்டல் கூட்டமொன்றில் அத்துமீறி பிரவேசித்து கலகம் பண்ணியமை மற்றும் புனித அல் குர்ஆனை களங்கப்படுத்தியமை தொடர்பிலான பொதுபலசேனாவுக்கு எதிரான வழக்கு விசாரணைகள் எதிர்வரும் ஜுலை 17ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
மேற்படி வழக்கு கோட்டை நீதிவான் பிரியந்த லியனகே முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தபோதே, மொரட்டுவை பல்கலைக்கு அனுப்பப்பட்டுள்ள குறித்த வழக்கின் முக்கிய ஆவணமான ஒளிநாடா பகுப்பாய்வு அறிக்கை கிடைக்கப்பெறும் வரைக்கும் வழக்கை ஒத்திவைப்பதாக நீதிவான் அறிவித்தார்.
-DC

