ஜப்பான் செல்லும் அமைச்சர் மங்கள சமரவீர

ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் பூமியோ கிசிடாவின் அழைப்பின் பேரில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர எதிர்வரும் 17 ஆம் திகதி, ஜப்பானுக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளார். 

அமைச்சர் மங்கள சமரவீர, இம் மாதம் 17 திகதி முதல் 20 ஆம் திகதி வரை ஜப்பானில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகின்றது. 

அமைச்சர் தனது இந்த விஜயத்தின் போது, 
இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் நல்லிணக்க செயற்பாடுகள், இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல், பொருளாதார, கலாசார விவகாரங்கள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து , ஜப்பான் வெளிவிவகார அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். 

 அதேவேளை டோக்கியோவில் எதிர்வரும் 20 ஆம் திகதி நடைபெறும் ஆசியாவில் சமாதானத்தை கட்டியெழுப்புதல், தேசிய நல்லிணக்கம் மற்றும் ஜனநாயக மயமாக்கல் என்ற தலைப்பிலான கருத்தரங்கில் சமாதனத்தை கட்டியெழுப்புதல் மற்றும் தேசிய நல்லிணக்கம் தொடர்பில் இலங்கையின் அனுபவங்கள் என்ற தலைப்பில் அமைச்சர் மங்கள சமரவீர உரையாற்ற உள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.


Related

Local 1144859350307891676

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the Week

cartoon

Popular Posts

item