மின்சக்தி, எரிசக்தி பிரச்சினை குறித்து ஆராய அப்துல் கலாம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்!
http://weligamanewsblog.blogspot.com/2015/06/blog-post_37.html
இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே, அப்துல் கலாம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
வெளிவிவகார அமைச்சின் ஊடக பேச்சாளர் மஹிஷினி கொலன்னே இதனை தெரிவித்துள்ளார்.
மின்சக்தி மற்றும் எரிசக்தி தொடர்பிலான பிரச்சினைகள் குறித்து இலங்கை அரசாங்கத்தினால் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள மாநாட்டில் கலந்து கொள்வதற்காகவே அப்துல் கலாம் இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளார்.
இந்த மாநாடு எதிர்வரும் 26 ஆம், 27 ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாநாட்டில் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியை கலந்து கொள்ளுமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கடந்த 8 ஆம் திகதி அவரை சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார் என மஹிஷினி குறிப்பிட்டுள்ளார்.
